×

எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா...! நினைவு தினத்தில் முதல்வர் பழனிசாமி புகழாரம்

சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தில் அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை 1909 ஆம் ஆண்டு 15 செப்டம்பர் ஆம் தேதி பிறந்தார். திராவிட கழகத்தை தோற்றுவித்த அண்ணா, தமிழகத்தின் 6வது முதல்வராக அரியணை ஏறியவர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதல் திராவிட தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக பேச, எழுத கூடிய அண்ணா, பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை கொண்டு சென்றவரும் இவரே.

அதனால் தான் இவர் தமிழக மக்களால் பேரறிஞர் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்த போது சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கினார். இரு மொழி கொள்கைகளை கொண்டு வந்த இவர், மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி அரசியல் வரலாற்றில் நீங்கா புகழுக்கு சொந்தக்காரர் ஆனார். இப்படி திராவிட சிந்தனைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வந்த இவர், முதல்வரான இரண்டு ஆண்டுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி உயிரிழந்தார்.

முதல்வர் பழனிசாமி புகழாரம்

முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓபிஎஸ், “தமிழை சுவாசித்தவர்;தமிழர்களை நேசித்தவர்;ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.

Tags : Anna ,Grandfather ,community ,Tamil ,Palanisamy ,Memorial Day , Tamil forever! Tamil! Grandfather Anna who lived for the Tamil community ...! Chief Minister Palanisamy praised on Memorial Day
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்