அபுபக்கர் பேட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டது. இவற்றை எல்லாம் சுட்டி காட்டும் வகையில் புறக்கணித்திருக்கிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு கெட்டு போய் விட்டது. பாஜவை சேர்ந்த கல்யாண ராமன் முஸ்லிம்கள், நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். திமுக போல இந்த கூட்ட தொடர் முழுவமும் புறக்கணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>