×

2வது டெஸ்ட் ரசிகர்களுக்கு அனுமதி

சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே சென்னையில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியைக் காண, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பிப். 13ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை, கட்டண விவரங்களை டிஎன்சிஏ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் செய்தியாளர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Test ,fans , India, England, Test, Fans, Permission
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்