×

மேலும் ஒரு திரிணாமுல் எம்எல்ஏ பாஜ.வில் இணைந்தார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், டைமண்ட் ஹார்பர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தீபக் ஹல்தார் கட்சியில் இருந்து விலகி நேற்று தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜ பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்முகுல் ராய் மற்றும் சுவேந்து அதிகாரி முன்னிலையில் பாஜ.வில் இணைந்தார்.

மக்களுக்காக சேவை செய்ய விடாததால், திரிணாமுல் காங்கிரசில் இருந்து அவர் விலகியதாக காரணம் தெரிவித்தார். இதுவரை 19 முக்கிய தலைவர்கள் பாஜ.வில் இணைந்துள்ளதால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Trinamool MLA ,BJP , West Bengal, Trinamool
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...