×

உலக அளவில் கெத்து...சேப்பாக்கத்தில் `ஆதிக்கம்’ காட்டினால் அஸ்வினை அசைக்க முடியாது

சென்னை: சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய முரளிதரன், வார்னே, கும்ப்ளே போன்றவர்களுக்கு இணையாக அஸ்வின் உருவெடுத்து இருக்கிறார். இவர்களையும் கூட அஸ்வின் சர்வதேச அளவில் மிஞ்சுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்துவீசினார். மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆடிய நிலையிலும் மூன்றிலும் அஸ்வின் பவுலிங்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
டெஸ்ட் அணியில் தனது அனுபவம் என்ன என்பதை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் நிரூபித்தார். சொந்த மண்ணில் அனுபவ ஸ்பின் பவுலர் நாதன் லயன் போன்ற வீரர்களே திணறியபோது அஸ்வின் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார்.

 இதன் மூலம் உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் தான்தான் கெத்து என்பதை அஸ்வின் நிரூபித்துவிட்டார். தற்போது அஸ்வினுக்கு இன்னுமொரு கூடுதல் வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்ட முடியும்.  காரணம் இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதனால் அஸ்வின், தான் ஸ்பின் பவுலிங் பழகிய மைதானத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியும். எளிதாக விக்கெட்டுகளை எடுக்க முடியும். அஸ்வினுக்கு பயந்துதான் இங்கிலாந்து அணியே இந்தியா வந்துள்ளது.

சென்னை ஸ்பின் மைதானம் என்பதால் அஸ்வினை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற அச்சம் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இதனால் கண்டிப்பாக இந்த தொடரில் அஸ்வின் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார். இங்கிலாந்து அணியில் அஸ்வின் அளவிற்கு சிறந்த ஸ்பின் பவுலர்கள் இல்லை. இதனால் அஸ்வின்தான் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் முத்திரை பதிப்பதன் மூலம் அஸ்வின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறலாம். மேலும்  தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் அஸ்வின் இதன் மூலம் மீண்டும் டி 20, ஒருநாள் போட்டிகளுக்கும் திரும்ப முடியும். முக்கியமாக குல்தீப் யாதவின் பார்ம் அவுட்டிற்கு இடையில் அஸ்வின் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும். இந்த தொடரில் மட்டும் அஸ்வின் காயமின்றி நன்றாக ஆடினால் அவரை அவ்வளவு எளிதாக இனி புறக்கணித்துவிட முடியாது.

Tags : Ashwin ,Chepauk , Carving on a global scale ... Aswin cannot be shaken if he dominates Chepauk
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...