வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது : எச்.ராஜா

சென்னை : பாஜக பிரமுகர் கல்யாணராமன் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசியபோது, நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதைக்கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கல்யாணராமன் மீது 8 பிரிவுகளின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’ஆண்டாள் நாச்சியார் இழிவாகப் பேசி, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசிய இந்து விரோத வைரமுத்து கைது செய்யப்படாத சூழ்நிலையில் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது. கண்டிக்கதக்கது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories:

>