×

11 மாதங்களுக்கு பிறகு அனுமதி கும்பக்கரையில் குதூகல குளியல் : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் குளிக்க 11 மாதங்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி அளித்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் நேற்று  உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவது வழக்கம். கொரோனா பரவலை தடுக்க, கடந்தாண்டு மார்ச் 1 முதல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது நோய் தொற்று  கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் உத்தரவின்பேரில், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க நேற்று முதல்  அனுமதி அளித்து வனத்துறை கேட் திறக்கப்பட்டது.  சுற்றுலாப்பயணிகளை அருவிக்கு அழைத்துச் செல்ல, புதிதாக மின்சார வாகனம் வனத்துறை  சார்பில் இயக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகளுக்கு ெதர்மல் ஸ்கேன் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.முகக்கவசம் கட்டாயம். 11 மாதங்களுக்கு பின்பு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்தனர்.



Tags : Kumbakara , Permission after 11 months Kuthukala bath in Kumbakara : Tourists delight
× RELATED வெள்ளப்பெருக்கு காலங்களில்...