சாத்தான்குளம் அருகே செட்டிவிளையில் அங்கன்வாடி மைய மேற்கூரையில் விரிசல்: பெற்றோர்கள் அச்சம்

சாத்தான்குளம்: செட்டிவிளையில்  அங்கன்வாடி மைய மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சிக்குட்பட்ட செட்டிவிளையில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40க்கு மேற்பட்ட குழந்தைகள்  கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் கட்டிடம் பழுதானதால் பெற்றோர்கள் அங்கன்வாடியை புதுப்பிக்க வலியுறுத்தினர்.  இதையடுத்து மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.8.70 லட்சத்தில் கடந்த 2019ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனோ ஊரடங்கு காரணமாக குழந்தைகள் அங்கன்வாடிக்கு வரவில்லை. குழந்தைகளுக்கு தேவையான ஊட்டசத்து, உணவுகள்  அவர்கள் வீடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் உட்புறம் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. மேலும் பல பகுதியில்  சிமெண்ட் பூச்சு பெயர்ந்து  கீறல் விழுந்து  காணப்படுகிறது. இக்கட்டிடம் தரமின்றி கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர்.  எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு முறையாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   

Related Stories:

>