11 மாதங்களுக்கு பிறகு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 11 மாதங்கள் கழித்து மீண்டும் படகு சவாரி துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.குன்னூர் சுற்று வட்டாரத்தில் பறவைகள் அதிகளவில் காணப்படும் பகுதி சிம்ஸ் பூங்கா ஆகும். இங்கு  நூற்றாண்டு பழமையான  மரங்கள், செடிகள் அதிகமாக உள்ளன. ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து  செல்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக, பூங்காக்கள் பூட்டப்பட்டன. அதன்பின், 8 மாதங்கள் கழித்து மாவட்டம் முழுவதும் பூட்டப்பட்ட பூங்காக்கள்  மற்றும் சுற்றுலா தளங்கள்  திறக்கப்பட்டன. குன்னூர் சிம்ஸ் பூங்காவில்  படகு சவாரி  நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் படகு  சவாரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, நேற்று படகு சவாரி துவங்கப்பட்டது. 11 மாதங்கள்  கழித்து படகு சவாரி துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: