×

மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு: மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் ஐக்கியம்.!!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகி பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பாஜவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்எல்ஏ தீபக் ஹால்டர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாக நேற்று அறிவித்தார். தீபக் ஹல்தார், இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று மத்தியம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் டயமண்ட் ஹார்பர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தீபக் ஹல்தார், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்முகுல் ராய் மற்றும் சுவேந்து ஆதிகாரி முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைந்துக்கொண்டார்.

தற்போதுவரை திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என 19 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : MLA ,West Bengal ,Trinamool Congress , Tensions in West Bengal politics: Another Trinamool Congress MLA united in BJP !!!
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி