×

அரிமளம், திருமயம் பகுதி வயல்களில் மழைநீர் வடிந்ததால் நெல் அறுவடை பணி தீவிரம்

திருமயம்: அரிமளம், திருமயம் பகுதி நெல் வயல்களில் மழை நீர் வடிந்ததால் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரப்பதம் உள்ள வயல்களில்  அறுவடை மெஷின் இறங்க முடியாததால் கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்ய வழியில்லாமல் குடும்பத்தினரே அறுவடை செய்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்தமாதம் தொடர்ந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் யாரும்  எதிர்பார்க்காத வகையில் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த  நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியது. தொடர்ந்து பலநாட்கள் மழை பெய்ததால் வயில் தேங்கிய நீரை வடிக்க முடியாமல் விவசாயிகள் பெரும்  சிரமப்பட்டு வந்தனர். அதேசமயம் தொடர்ந்து வயல்களில் நீர் தேங்கி இருந்ததால் நெல் பயிர்களின் அடி தண்டு அழுகி வயலில் தேங்கி இருந்த நீரில்  சாய்ந்து நெல் முளைக்க தொடங்கியது. இது அப்பகுதி விவசாயிகளை பெரும் துயரத்தில் தள்ளியது.

இதனிடையே தற்போது அரிமளம், திருமயம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்தாலும் பகல்  நேரங்களில் வெயில சுட்டெரித்து வருவதால் நெல் வயல்களில் தேங்கிய மழைநீர் படிப்படியாக வடிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மழையால்  சேதமடைந்த நெல் போக மீதமுள்ள நெல்லை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வயலில் இருந்து நீர்  வடிந்தாலும் ஈரப்பதம் இருப்பதால் அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் குடும்ப உறுப்பினர்கள்,  உறவினர்களுடன் சேர்ந்து நெல் அறுவடை செய்து வருகின்றனர். இது விவசாயிகளுக்கு கூடுதல் பணிச்சுமை, செலவை ஏற்படுத்தி வருவதோடு  கூலிக்கு வேலை ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். ஏற்கனவே மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்லை மழைக்கு  பறி கொடுத்த விவசாயிகளுக்கு இந்த கூடுதல் செலவு மேலும் மன உைளச்சலை ஏற்படுத்தி வருகிறது.

இது பற்றி திருமயம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:இந்த வருடம் சம்பா நடவுக்கு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யவில்லை. இருந்த போதிலும் கிணற்றுப்பாசன உதவியுடன் திருமயம் பகுதியில்  விவசாயம் செய்யப்பட்டது. பூச்சி மருந்து, உரம், உழவு பணி, பணியாட்கள் கூலி உள்ளிட்டவைகளுக்காக ஏக்கருக்கு பல செலவு செய்து அறுவடைக்கு  தயாரான நேரத்தில் மழைபெய்ததால் அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். மழையில் அழிந்தது போக மிச்ச  மீதியை வீட்டுக்கு கொண்டு வர அறுவடை இயந்திரம் வயல்களுக்குள் செல்ல முடியாததால் கூலி ஆட்கள் உதவியை விவசாயிகள் நாட வேண்டி  உள்ளது.பெரும்பாலான விவசாயிகளிடம் பணம் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் அறுவடை  செய்து வருகின்றனர் என்றனர்.

Tags : areas ,Thirumayam ,Arimalam , Actress Chitra commits suicide ..: Police report in court that Chitra committed suicide by hanging herself ...
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...