×

வாக்காளர் அடையாள அட்டையை செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம்

ராணிப்பேட்டை:வேலூர் ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் தேர்தல் ஆணையம் புதுமைகளை புகுத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தேசிய வாக்காளர் தின விழா கடந்த 25ம் தேதி கொண்டாடப்பட்டது. அதில், e-EPIC என்ற புதிய சேவையை வழங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையை அவர்களது செல்போன் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இந்த வாக்காளர் அடையாள அட்டை அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதாகும். பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ளலாம். க்யூஆர் கோட் மூலம் வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண் மற்றும் தேர்தல் தொடர்பான இதர தகவல்களை பெறலாம். <  https://nvsp.in  >, <  http://voterportal.eci.gov.in  >, Voter Helpline கைபேசி செயலி மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இணைய முகவரி பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டை எண்/ பதிவு எண் குறிப்பிடவும், ஓடிபி எண் பதிவிடவும். பின்னர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.

Eroll-லில் கைப்பேசி எண் பதிவு செய்ய <  https://kyc.eci.gov.in  > என்ற இணைய முகவரியை பயன்படுத்த வேண்டும். kyc என்ற இணைப்பை அழுத்த வேண்டும். முக அங்கீகார சரிபார்ப்பினை அனுப்ப வேண்டும். kyc முடிக்க இறுதியாக உங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். e-EPIC அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். 2021 ஜனவரி 25ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை வாக்காளராக பதிவு செய்தவர்களும் பயனடையலாம். e-kyc சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : அடையாள அட்டை
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி