×

எம்.டெக் உயிரி தொழில்நுட்ப படிப்புக்கு மாணவர் சேர்க்கை உடனே நடத்துக!: உயர்கல்வி முதன்மை செயலருக்கு திருமாவளவன் கடிதம்..!!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் ரத்து செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கையை உடனே நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை முதன்மை செயலருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியிருக்கிறார். உயர்கல்வித்துறையின் முதன்மை செயலர் அபூர்வாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார். எம்.டெக் உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் எம்.டெக் கணக்கீட்டு உயிரியல் திட்டம் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ள செய்தி கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாக திருமாவளவன் கூறியுள்ளார்.

69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தயக்கம் காரணமாக மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எம்.டெக் பயோ டெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டரேஷ்னல் பயோ டெக்னாலஜி பாடத்தில் சேர 45 மாணவர்கள் நுழைவு தேர்வில் வெற்றிபெற்று கலந்துரையாடலுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் 69 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கையை நடத்த மறுப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி பாதிக்கப்படுவதாகவும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 69 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை உடனே நடத்துமாறு முதன்மை செயலரை திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Thirumavalavan ,Principal Secretary , M.Tech, Biotechnology Student, Student Admission, Thirumavalavan
× RELATED கல்குவாரிகளை ஆய்வு செய்து கண்காணிக்க...