கிழக்கு திசை காற்றலைகளால் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: கிழக்கு திசை காற்றலைகளால் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னை, புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. சூறைக்காற்று வீசவதால் மன்னார்வளைகுடா குமரிக்கடலுக்கு பிப். 4 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>