×

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாததால் வெளிநடப்பு செய்தோம் : மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

சென்னை: இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த வருகை தந்தார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் நேற்றைய மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் தேவையான நிதி ஒதுக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் ஆளுநருடன் கடும் வாக்குவாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல என்று திமுக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர். திமுக உறுப்பினர்கள் முழுக்கத்தை அடுத்து பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். மேலும் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரம் இது என்றும் ஆளுநர் கூறியதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தான் கூறியதில் தவறு ஏதும் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆளுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து, தனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் தி.மு.கவினர் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு அவைக்கு திரும்பலாம் என ஆளுநரே ஆலோசனை கூறியதால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்வதை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பியதுடன் வெளிநடப்பு செய்தனர்.


மு.க.ஸ்டாலின் விளக்கம்


இதனிடையே வெளிநடப்பு செய்த பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது,எழுவர் விடுதலை, அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் ஆளுநர் மவுனம் சாதிக்கிறார். இது குறித்து பேச சட்டப்பேரவையில் எந்த வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. இதையெல்லாம் ஏற்கனவே மக்கள் மன்றத்தில் இதை பேசிவிட்டோம். ஆளும் அரசின் கடைசி பட்ஜெட் இது அமைதியாக இருங்கள் என்று ஆளுநர் கூறினார். அது உள்ளபடியே உண்மை. ஆளும் அரசின் ‘கடைசி’ பட்ஜெட் இதுதான், என்றார்.


Tags : announcement ,release ,governor ,Tamils ,MK Stalin ,Perarivalan , மு.க.ஸ்டாலின், விளக்கம்
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...