×

சோமாலியாவில் ஹோட்டலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்!: 13 பேர் சுட்டுக்கொலை..!!

மொகாடிசியோ: சோமாலியாவில் ஹோட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் சபா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை இவர்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம், உள்ளூர் போலீஸ் தலைமை அதிகாரி, மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தலைநகர் மொகாடிசியோவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் குழுவாக இருந்தனர்.

அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டிவந்த தற்கொலைப்படை தீவிரவாதி, ஹோட்டலின் நுழைவு வாயில் மீது காரை மோதி வெடிக்க செய்ததில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தொடர்ந்து 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இந்த கொடூர தாக்குதலில் முன்னாள் ராணுவ ஜெனரல் உட்பட 13 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ஹோட்டலை சுற்றி வளைத்தனர். அதற்குள் ஹோட்டலுக்குள் இருந்த சிலரை பிணை கைதியாக பிடித்துவைத்துக் கொண்டு போலீசாருடன் தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.


Tags : Terrorists ,hotel ,attack ,Somalia , Somalia, hotel, militants, attack, 13 people shot dead
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!