×

9 மாதங்களில் முதன்முறையாக ஒரு நாள் பாதிப்பு, பலி எண்ணிக்கை மிக மிக குறைவு ... கொரோனா போரை வெல்லும் முனைப்பில் இந்தியா!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.  தற்போது புதிய பாதிப்பு 8 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும்  குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர்,  இறப்பு விகித நிலவரம்  குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,635 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,66,245 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 94 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,486 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,423 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின்  எண்ணிக்கை 1,04,48,406 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,63,353 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 97.05% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.43% ஆக  குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 6,59,422 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 19,77,52,057 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*இதுவரை 39,50,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Tags : war ,India ,Corona , Corona, India
× RELATED “நீதியின் பக்கம் நின்று, I.N.D.I.A....