மதுரையில் கட்டடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு: போலீசார் அதிரடி

மதுரை: மதுரை அருகே கட்டடம் இடிந்து மூவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை வடம்போக்கி தெருவில் கட்டுமானப்பணியின் போது கட்டடம் இடிந்து மூவர் உயிரிழப்பு - கட்டட உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மதுரை மேலமாசி வீதியில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது. இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நேற்று காலை நடந்தது நடந்து வந்த நிலையில், இதில் 10க்கும் மேற்பட்டோர் பணி செய்து வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று மதியம் 1 மணியளவில் கட்டிட சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது . இதில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீரர்கள், இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்திரன், ராமன் மற்றும் ஜெயராமன் ஆகிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய திடீர் நகர் போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் மதுரையில் கட்டடம் இடிந்து 3 பேர் இறந்த விவகாரத்தில் அதன் உரிமையாளர் வாசுதேவன், ஒப்பந்ததாரர்கள் கருப்பையா, அய்யனார் ஆகியோர் மீது திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>