×

உரிய அங்கீகாரம் தரப்படவில்லை பாஜ.வில் சிந்தியா அதிருப்தி

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்த்து, பாஜவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் அரசியல் பரம்பரை சேர்ந்த முக்கிய  தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜவில் இணைந்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து  பாஜ ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பாஜ, சிந்தியா உள்ளிட்ட தலைவர்களுக்கு போதுமான அங்கீகாரம் வழங்கவில்லை என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கேற்றார் போல் மத்தியப்பிரதேசத்தில் பாஜ  புதிதாக உருவாக்கியிருக்கும் பிரதிநிதிகள் குழுவிலும் சிந்தியா உள்ளிட்டோர் இல்லை. இதனால், ஜோதிராதித்யா சிந்தியா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மபி மாநில பாஜ பொறுப்பாளரான முரளிதர் ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ‘‘மபியில் மூத்த தலைவர்களையும் தாண்டி, அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. அதை உங்களுக்கு  நினைவுபடுத்துகிறேன். காங்கிரஸில் பாதுகாப்பின்மையுடன் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் தற்போது மகிழ்ச்சியுடன் உள்ளனர். பாஜவின் சாதாரண தொண்டராக சிந்தியா இங்கு இல்லை. மொத்த கட்சிக்குமே தலைவராக  உள்ளார்’’ என்று கூறினார்.

Tags : Cynthia ,BJP , Cynthia dissatisfied with BJP for not giving due recognition
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...