×

ஆட்டோக்களுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை கிலோவுக்கு 4.9 உயர்வு: டிரைவர்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: ஆட்டோக்களுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை கிலோவுக்கு 4.9 வரை உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து வாகனங்களான வேன், மேக்ஸி கேப், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கார் என 12.30 லட்சத்துக்கும் மேற்பட்டவை பயன்பாட்டில் உள்ளன. இதில், தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் ஆட்டோக்கள் இயக்கத்தில் உள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எல்பிஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி எல்பிஜியில் இயக்கும் ஆட்டோக்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களில் சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜி முறையிலேயே இயங்குகிறது. இந்த ஆட்டோக்களில் எல்பிஜி மட்டும் இல்லாமல், அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் பெட்ரோலில் இயங்கும் வசதியும் உள்ளது. முன்பு ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜியின் விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் போல எல்பிஜியின் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு மாதத்தில் 4.9 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு கிலோ 49.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : LPG cylinder price hike ,Drivers , Auto, LPG cylinder, price, hike
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...