சுகாதாரத்துறையினரை தொடர்ந்து முன்கள பணியாளருக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் தமிழகம் வந்தது.  முதல்கட்டமாக16ம் தேதி மருத்துவ பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 15 நாட்களை நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 821 சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வரும் வாரத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி  தொடங்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், மாநில காவல் துறையினர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>