×

மின்ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

சென்னை: மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதோடு, மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக சொன்னாலும் சட்டத்திலுள்ள சில ஓட்டைகளை பயன்படுத்தி ஏல முறையில் உற்பத்தியையும், விநியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மயப்படுத்த நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 3ம் தேதி (நாளை) வேலை நிறுத்தம் நடக்கிறது.

மின்சார வாரியத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்பாமல் மக்கள் சேவை தொடர முடியாமல் கடும் வேலைப்பளுவுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் அனைத்தும் அவுட்சோர்சிங் என்ற முறைகளை புகுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. மின்சார சட்டதிருத்த மசோதா 2020ஐ கைவிட வேண்டும். ஏலமுறையை புகுத்தக்கூடாது. ஒப்பந்த முறையில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Electricians , Electricians, strike
× RELATED கார் டயர் வெடித்து விபத்து திருச்சியை...