அதிமுக ஆட்சியின் கொரோனா காலத்தில் மாஸ்க் கொடுக்கிறோம் என கூறி கொசு வலையை கொடுத்தார்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருக்கழுக்குன்றம்: அதிமுக ஆட்சியில், கொரோனா காலத்தில் மாஸ்க் கொடுக்கிறோம் என கூறி கொசு வலையை கொடுத்தார்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். கேளம்பாக்கம் அடுத்த தையூரில், மாற்று  கட்சியினர் இணையும் விழா நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், திருப்போரூர் ஒன்றிய  இளைஞர் அணி அமைப்பாளர் கௌரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாற்று கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்களுக்கு  சால்வை அணிவித்து வரவேற்றார். அவருக்கு, வெள்ளி வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர், அவர் பேசியதாவது.

இந்த இணைப்பு விழா மாவட்ட மாநாடு போன்று கூட்டம் நிரம்பி வழிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில், உதய சூரியன் பிரகாசமாக உதிக்கப்போகிறது என்பதற்கு சான்றுதான் இந்த கூட்டம். பாஜவிடம் இருந்த ஒரு வேல் பறிக்கப்பட்டு  என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. நான் வாழ்த்த வரவில்லை, உங்களிடம் வாழ்த்து பெற வந்துள்ளேன். கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. மாஸ்க் கொடுக்கிறோம் என கொசு வலையை கொடுத்தார்கள். மோடி  பெயரையும், எடப்பாடி பெயரையும் சொன்னாலே மக்கள் அசிங்கமாக பேசுகிறார்கள். மோடிக்கு ஜல்ரா அடிப்பதுதான் எடப்பாடிக்கு இருந்த ஒரேவேலை’ என்றார்.

எம்பி செல்வம், மாவட்ட துணை செயலாளர் அன்பு செழியன், முன்னாள் எம்எல்ஏ. தமிழ்மணி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூர் செயலாளர் தேவராஜ், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர்  யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: