×

ரத்ததான முகாம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையும், தனியார் அமைப்பு இணைந்து ரத்ததான முகாம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் கூடுவாஞ்சேரி அடுத்த  நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள்  கூடுவாஞ்சேரி அசோகன், ஓட்டேரி குமார், மறைமலைநகர் நந்தகோபால், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள்  அன்புராஜ், ஹேமந்த்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் நாகராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எஸ்பி கண்ணன் கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் 150க்கும் மேற்பட்டோர்  ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட ரத்தம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.



Tags : camp , The bloody camp was held yesterday in collaboration with the Chengalpattu District Police and a private organization.
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு