ஆன்லைன் வர்த்தகம் மூலம் கார் விற்பதாக பண மோசடி: பலே ஆசாமி கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் ஜெய் நகரை சேர்ந்தவர் ராஜன் (52). இவர், ஆன்லைன் செயலி மூலம் கார் வாங்க முயன்றார். அப்போது, கார் விற்பனை என பதிவு செய்திருந்த தீபக்கை தொடர்புகொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.  இதையடுத்து, அந்த காரை வாங்க ராஜன் சம்மதித்தார். இதையடுத்து, முன்பணமாக 10 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தும்படி தீபக் கூறியுள்ளார். அதன்படி, ராஜன் 10 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால், காரை விற்காமல் தீபக்  தலைமறைவானார். போலீசார் விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் (24), தீபக் என்ற பெயரில் கார் விற்பனை செய்வதாக பலரிடம் பண மோசடி செய்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories:

>