மதுரை மேலமாசி வீதியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்.!!!

சென்னை: மதுரையில் பழைமையான கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் மரணம் அடைந்தற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், மதுரை மேலமாசி வீதியில் பழைமையான கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் மரணம் அடைந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

அந்த இருவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரையில் ஏற்கனவே தீபாவளியன்று நடந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் இருவர் கட்டடம் இடிந்து விழுந்து மரணமடைந்தும் - அ.தி.மு.க. அரசு  அலட்சியம் காட்டியதன் விளைவுதான் இப்போது மற்றுமொரு பழமையான கட்டடம் இடிந்து விழுந்து இருக்கிறது.மதுரை மாநகராட்சி  நிர்வாகம் கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா? பழமையான கட்டடங்கள்  குறித்தும், அங்கு வசிப்போரின் பாதுகாப்பு பற்றியும்  மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் கவனம் செலுத்த மாட்டார்களா?

கடைசி நிமிடக் கையெழுத்துப் போட்டு கமிஷனடிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, எளிய மக்களின் உயிர்கள் பலியாவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். இனியேனும் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதுடன், மதுரையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடையும் வழங்க முதலமைச்சர் திரு. பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>