பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் அதிமுக எம்.பி தம்பிதுரை சந்திப்பு

டெல்லி: இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலத்திற்கு சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி தம்பிதுரை சந்தித்தார். அதுகுறித்து கூறுகையில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று கூறினார்.

மேலும் கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு மோடியிடம் நன்றி கூறியதாகவும் அவர் தெரிவித்தார். முன்னாள் மக்களவை துணை சபாநாயகராகவும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ள அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை இந்த சூழ்நிலையில் பிரதமரை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.

அதேசமயம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியை தம்பிதுரை சந்தித்துள்ளார். மேலும் அதிமுகவில் பல திருப்பங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜனவரி 14ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். அத்துடன் அதே நாளில் காங்கிரஸ் தலைவரான ராஜீவ் காந்தியும் தமிழகத்திற்கு வருகைதரவிருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Related Stories:

>