×

ராமர் கோயில் நன்கொடை குறித்து கேட்டதற்கு எதிர்ப்பு!: தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வீட்டின் மீது பாஜக-வினர் கற்களை வீசி தாக்குதல்..!!

தெலுங்கானா: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை நிதி எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பிய தெலுங்கானா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வீட்டின் மீது பாஜக-வினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பரக்காலா எம்.எல்.ஏ. தர்மா ரெட்டியின் வீடே தாக்குதலுக்கு உள்ளானது. பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ராமர் கோயில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி குறித்த வெளிப்படை தன்மையை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதா கட்சியினர்,  எம்.எல்.ஏ. தர்மா ரெட்டி வீட்டை முற்றுகையிட்டனர். ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன்  எம்.எல்.ஏ. தர்மா ரெட்டி வீட்டின் மீது கற்கள், முட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் வீடு தாக்கப்பட்டதால் தெலுங்கானா மாநிலம் பரக்காலாவில் பெறும் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் அங்குள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பையும் கைது செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அக்கட்சியினர் ஒருவர் தெரிவித்ததாவது, என்ன பேசினார் தர்மா ரெட்டி? ராமர் கோயில் கணக்கு பற்றி கேள்வி கேட்டது தாப்பா? எங்களுடைய முயற்சியால் கோவில் எழுப்பப்பட்டு வருகிறது. நாங்களும் கோயில் பணிக்காக காசு கொடுதித்திருக்கிறோம். எங்களுடைய அறக்கட்டளை சார்பிலும் பணம் வழங்கி இருக்கிறோம் என குறிப்பிட்டார்.


Tags : party MLA ,winners ,Ram temple ,attack ,Telangana ,BJP ,house , Ram temple donation, Telangana, ruling party MLA, BJP, attack
× RELATED கேரளாவில் கோயில் திருவிழாவின்போது...