×

மதுரையில் சோகம்!: பழைய கட்டடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

மதுரை: மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடம்போக்கி தெருவில் பழைய கட்டிடம் ஒன்றினை இடித்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மதுரை வடம்போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமாக 65 ஆண்டுகள் பழமையான கட்டடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தினை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டுவதற்காக திட்டமிட்டு அதற்கான பணிகள் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மதுரையை சேர்ந்த 6 தொழிலாளர்கள் கட்டிடத்தில் புதிதாக சென்ட்ரிங் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயம் ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டடத்தில் மீதம் உள்ள பகுதிகள் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேரும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கினர். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் சந்திரன், ஜெயராமன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். எஞ்சியுள்ள மற்றொருவரை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் கட்டட பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Madurai ,building ,death , Madurai, old building, 2 workers, killed
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...