×

யானைகளை கொண்டு செல்ல குஷன் உள்ளிட்ட சிறப்பு வசதி கொண்ட லாரிகளை கொள்முதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: யானைகளை கொண்டு செல்ல குஷன் உள்ளிட்ட சிறப்பு வசதி கொண்ட லாரிகளை கொள்முதல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டம், மசினக்குடியில் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவங்களை மேற்கோள்காட்டி, ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை மீட்பது குறித்து ஆலோசனைகள் வழங்க சர்வதேச கால்நடை ஆலோசகர்களை நிரந்தரமாக நியமிக்க கோரி, யானைகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை மீட்பதாக கூறி, அதிகளவில் மயக்கமருந்து செலுத்தியும், கும்கி யானைகளை பயன்படுத்தியும் வனத்துறையினர் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். வனத்துறையினரின் அக்கறையின்மையும், யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் இல்லாததும், போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததுமே, காட்டு யானைகளின் மரணங்களுக்கு காரணம் எனவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் யானைகளை கொண்டு செல்ல குஷன் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் கொண்ட லாரிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், சர்வதேச ஆலோசகரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குஷன் உள்ளிட்ட சிறப்பு வசதி கொண்ட லாரிகளை கொள்முதல் செய்ய தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தராய்ட்டர். வனப்பகுதிகள், விலங்குகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். யானைக்கு தீவைப்பு, லாரி மோதி யானை பலி போன்ற சம்பவங்களை மேற்கோள்கட்டி ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்தியாவிலேயே நிபுணர்கள் உள்ளதால் சர்வதேச ஆலோசகர்கள் நியமிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யானைகளை கையாள உள்நாட்டு ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. தண்டவாளங்களை கடக்கும் விலங்குகள் பலியாவதை தடுக்க பசுமை பாலங்களை அமைக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : facilities ,iCourt , Purchase trucks with special facilities including cushions to transport elephants: high court
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு