பாரத் பெட்ரோலியம்,ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி...மத்திய அரசு பங்குகளை விற்கவுள்ள நிறுவனங்கள்

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு மிகுந்த பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2021 தாக்கலின் போது, தனியார் முதலீடுகள் குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.3.எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்க திட்டம். 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடியும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் – அரசு கூட்டுப் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெற முடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு அவசியம்” என்று தெரிவித்தார்.

மத்திய அரசு பங்குகளை விற்கவுள்ள நிறுவனங்கள்

*பாரத் பெட்ரோலியம்

*ஏர் இந்தியா

*துறைமுக கழகம்

*ஐடிபிஐ வங்கி

*பவன் ஹன்ஸ்(ஹெலிகாப்டர் கம்பெனி )

*கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா!!

Related Stories:

>