×

சென்னை - சேலம் 8 சாலைக்கான டெண்டர் வரும் நிதியாண்டில் வெளியிடப்படும்; வரும் நிதியாண்டிலேயே சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கான டெண்டர் அறிவிப்பு வரும் நிதியாண்டிலேயே சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 8 வழிச்சாலை அமைக்க நிலம் தர மறுத்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் பட்ஜெட்டில் பணிகள் தொடங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று நிலம் கையகப்படுத்தக்கூடிய பணிக்கு தடை பெற்றனர். தற்போது உச்சநீதிமன்றமும் புதிய notification-ஐ பெறலாம்.

இந்த திட்டத்திற்கு தடை இல்லை என்று சில மாதங்களுக்கு முன்னர் இறுதி தீர்ப்பை வழங்கியிருந்தனர். இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் 1 லட்சம் கொடிக்கான 3,500 கி.மீ. சாலை பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மதுரை-  கொல்லம் வரையிலான புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அதில் ஒன்றாக சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கான டெண்டர் வரும் நிதியாண்டில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ஜெட் உரையுடன் கூடிய இணைப்பு ஆவணத்தில் இதற்கான அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்க்கு விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முற்படக்கூடாது என்று 8 வழிச்சாலை எதிர்ப்பு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


Tags : road ,Chennai-Saleem 8 ,Nirmala Sitharaman , Tender for Chennai-Saleem 8 road will be issued in the next financial year; Nirmala Sitharaman has announced that the construction work of the road will begin in the coming financial year
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...