×

விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது....விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு : மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு மிகுந்த பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறையின் கீழ் உள்ள முக்கிய அறிவிப்புகளை காணலாம்!!

*விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது.

*வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். விவசாயிகள் 1.5 மடங்கு கூடுதல் வருவாய் பெறுவதை குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும். குறைந்தபட்ச ஆதார விலை மூலம் 43 லட்சம் விவசாயிகள் நேரடியாக பலன் பெறுகின்றனர்.

*குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படியில் ரூ. 1.72 லட்சம் கோடி அளவிற்கு விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.

*2020-2021 நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ. 75 ஆயிரம் கோடி உதவித் தொகை விடுக்கப்பட்டுள்ளது.

*நெல் கொள்முதலுக்கான குறைந்த பட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

*நுண்ணீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் ரூ. 10000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

*விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ1,000 கோடியில் திட்டம்

Tags : government , மத்திய அரசு
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்