×

LIC தனியார் மயமாகிறது; IDBI வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு!: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா காலம் என்பதால் வழக்கமான காகித பட்ஜெட்டிற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ஐ-பேடில் பட்ஜெட் வாசிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு தாக்கலாகும் முதல் பட்ஜெட் என்பதாலும், 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய பட்ஜெட் இருக்கும் என நிதியமைச்சர் சொல்லியிருந்த காரணத்தாலும் இந்த பட்ஜெட் மீது பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

எல்.ஐ.சி. நிறுவன பங்கு:

* எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க  நடவடிக்கை.

* பொதுமக்கள் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.

தனியார் மயமாகும் IDBI வங்கி:

ஐ.டி.பி.ஐ. வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்த ஆண்டு நடவடிக்கை.

* அரசுக்கு சொந்தமான பொது காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் இந்த ஆண்டு தனியார்மயக்கப்படும்.

* இந்த ஆண்டு அரசு நிறுவனங்கள் விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tags : LIC ,IDBI Bank , LIC Private, IDBI Bank, Private, Federal Budget
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...