×

மும்பை - குமரி இடையே தொழில் வழித்தடம் அமைக்க திட்டம், சென்னை மெட்ரோ விரிவாக்கம்: நெடுஞ்சாலை, ரயில்வேதுறையில் முக்கிய அறிவிப்புகள்!!

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு மிகுந்த பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள முக்கிய அறிவிப்புகளை காணலாம்!!

*3,500 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

*கன்னியாகுமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும்.

*மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும்.  இதற்கான கட்டுமான பணிகள் அடுத்தாண்டு தொடங்கும். 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழகத்தில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

*தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்

*2022-ம் ஆண்டுக்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்

*கேரளாவில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*அஸ்ஸாமில் 1,300 கி.மீ நீளத்துக்கு நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

*மொத்தமாக 1,18, 101 கோடி ரூபாய் சாலைவழிப் பயணம் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

*மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 95,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*மும்பை - கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடம் அமைக்க திட்டம் வகுக்கப்படும்.

*பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்த ஆண்டு ஜூன் 22 நிறைய நிறைவடையும்.

ரயில்வேத்துறை

*ரயில்வே மற்றும் விமான துறையை மேம்படுத்த புதிய கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். உற்பத்தி துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும்.ஏற்கனவே 41,000 கிலோ மீட்டர் தூர ரயில்  மின்மயமாக்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள 72 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன.

*ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சார்ந்த அறிவிப்புகள்!!

*நாட்டின் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

*சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்

*பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.


Tags : Railways , நெடுஞ்சாலை, ரயில்வேதுறை
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்