நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர்: ஏப். 2-ம் வாரத்தில் தொடங்க பி.சி.சி.ஐ திட்டம்?

மும்பை: நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரை ஏப்ரல் 2ம் வாரத்தில் தொடங்கி ஜூன் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. இதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு, ஐ.பி.எல். நிர்வாகம் 100 கோடி இந்திய ரூபாயினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 14வது சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம், வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை எங்கு நடத்துவது என இதுவரை உறுதி செய்யவில்லை.

ஆனால் வாய்ப்புகள் அனைத்தும் சாதகமாக இருந்து அரசு அனுமதித்தால் இந்தியாவில் போட்டிகள் நடத்தப்படும் என பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை ஏப்ரல் 2ம் வாரத்தில் தொடங்கி ஜூன் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மேற்கொள்ளவில்லை. உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் இந்த தொடரை உள்நாட்டிலேயே மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>