×

ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்தவர் கைது: திருமண ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.40 லட்சம் பறிப்பு; பெண் நீதிபதியின் மகன் என அறிமுகமானது அம்பலம்

அண்ணாநகர்: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்ததுடன், நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்த 23 வயது இளம்பெண், தனியார் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நண்பர் ஒருவர் மூலம் பெரம்பூர் பட்டேல் சாலையை சேர்ந்த பாலாஜி (24) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது பாலாஜி, தன்னை பெண் நீதிபதியின் மகன் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்தனர். அப்போது, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் பாலாஜி நெருக்கமாக இருந்துள்ளார். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, பாலாஜியிடம் மாணவி கூறியுள்ளார். அதற்கு பாலாஜி, ‘‘உன்னை திருமணம் செய்ய வேண்டுமானால், கர்ப்பத்தை கலைக்க வேண்டும். அப்போது தான் எங்கள் வீட்டில் சம்மதம் தெரிவிப்பார்கள்,’’ என கூறியுள்ளார். இதை நம்பிய மாணவியும் கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்நிலையில், மாணவியின் பெற்றோரிடம் திருமண செலவுக்கு பணம் தேவை எனக்கூறி ரூ.40 லட்சத்தை பெற்ற பாலாஜி, திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து மாணவி கேட்டதற்கு, ‘‘உன்னை திருமணம் செய்ய முடியாது. இதை மீறி என்னிடம் தகராறு செய்ய நினைத்தால், நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்,’’ என பாலாஜி மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது, அவர் நீதிபதியின் மகன் இல்லை என தெரியவந்தது. இதுபற்றி அறிந்த பாலாஜி தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு பாலாஜி  தனது வீட்டுக்கு வருவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : College student ,judge , College student arrested for threatening to post pornography on social networking site Introduced as the son of a female judge exposed
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...