இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு... இயான் சேப்பல் கணிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆஸி. முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: கடும் சவாலாக அமைந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், பல்வேறு பின்னடைவுகளையும் சமாளித்து சாதனை வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடக்க உள்ள தொடரிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும். அதிலும், கேப்டன் விராத் கோஹ்லி அணிக்கு திரும்புவது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

அஷ்வின், இஷாந்த், ஹர்திக் ஆகியோரும் இடம் பெறுவது, வீழ்த்த முடியாத அணியாக இந்தியாவை மாற்றும். முன் வரிசையில் ரோகித், கில், புஜாரா களமிறங்குவது இங்கிலாந்து டாப் ஆர்டரை விடவும் வலுவானது என்பதில் சந்தேகமில்லை. ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் தயார் என்றால், இந்தியாவை கையிலேயே பிடிக்க முடிக்க முடியாது. இவ்வாறு சேப்பல் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் வரும் 5ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: