×

ட்வீட் கார்னர்: ரசிகர்களுக்காக காத்திருக்கிறேன்!

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்னில் பிப். 8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தல் முடிந்து பயிற்சியை தொடங்கி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்க உள்ள செக் குடியரசு நட்சத்திரம் பெட்ரா குவித்தோவா, ‘ஆஸி. ஓபனில் விளையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். மீண்டும் ரசிகர்கள் முன்பாக விளையாடப் போகிறோம் என்பதே புதிய உற்சாகத்தை கொடுக்கிறது. கடந்த ஆண்டு கொரோனாவால் முடங்கிப்போன நிலையில், மெல்போர்னில் இயல்பான வாழ்க்கையை பார்ப்பது மிகவும் வித்தியாசமாக மட்டுமல்ல மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என்று ட்வீட் செய்துள்ளார்.

Tags : fans , Tweet Corner: Waiting for the fans!
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...