×

உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் டாய் ட்ஸூ யிங் சாம்பியன்

பாங்காக்: உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், தைவான் வீராங்கனை டாய் ட்ஸூ யிங் சாம்பியன் பட்டம் வென்றார். பாங்காக்கில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினுடன் மோதிய டாய் ட்ஸூ யிங் 14-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 21-8 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் இழுபறியாக நீடித்த போட்டியில் டாய் ட்ஸூ யிங் 14-21, 21-8, 21-19 என்ற கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். இது உலக டூர் பைனல்சில் அவர் பெறும் 3வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய வாரங்களில் நடந்த 2 தாய்லாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியிலும் கரோலினாவிடம் தோற்று ஏமாற்றத்துக்குள்ளான டாய் ட்ஸூ, அந்த தோல்விகளுக்கு உலக டூர் பைனல்சில் பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.

Tags : World Tour Finals Badminton Toy Tzu Ying Champion , World Tour Finals Badminton Toy Tzu Ying Champion
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...