×

கங்குலி டிஸ்சார்ஜ்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு, கடந்த 2ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு, கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் கடந்த புதன்கிழமை அவருக்கு இதய வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு பின் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து வியாழக்கிழமை அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு ஸ்டன்ட் பொருத்தப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Tags : Ganguly , Ganguly discharge
× RELATED மம்தாவுடன் சவுரவ் கங்குலி சந்திப்பு திரிணாமுல் காங்கிரசில் இணைகிறாரா?