வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மின் ஊழியர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தம்: தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 3ம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மின்வாரியத்தில் ஆரம்ப கட்ட பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் அனைத்தும் அவுட்சோர்சிங் என்ற முறைகளை புகுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. மின்சார சட்டதிருத்த மசோதா 2020யை கைவிட வேண்டும். ஏலமுறையை புகுத்தக்கூடாது. ஒப்பந்த முறையில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது. காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் வரும் 3ம் தேதி நடத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>