×

கட்சி தாவும் தலைகள் திணறும் திரிணாமுல்

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க போராடி வருகிறது.
ஆனால், மேற்கு வங்கத்தில் கால் பதித்து மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கி காய்களை நகர்த்தி வருகிறது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜ.வில் ஒவ்வொருவராக ஐக்கியமாகி வருகிறார்கள்.  

இதனால், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ளார். தேர்தலுக்குள் இக்கட்சியில் மம்தாவை தவிர மற்ற தலைவர்கள் யாருமே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றவர் பாஜ தலைவர்கள். குறிப்பாக, இதன் முதன்மை சூத்திரதாரி அமித்ஷாதான். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே இப்போது இருந்தே அறிக்கைப் போர், காட்டமான விமர்சனங்கள் என தேர்தல் ஜூரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இதில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் தனியாக கூட்டணி பேச்சு நடத்தி வருகின்றன.

Tags : Trinamool with party jumping heads
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...