×

சிவகாசியில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்வயர்களால் ஆபத்து

சிவகாசி: சிவகாசி அருகே கிராமங்களில் விவசாய நிலங்களிலும் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பட்டாசு, தீப்பெட்டி தொழில் தவிர ஆங்காங்கே விவசாய பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக எரிச்சநத்தம், நடையனேரி, கொத்தனேரி, செவலூர், எம்.புதுப்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. வறட்சி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலும் கூட இந்த கிராம பகுதிகளில் நெல், மக்காசோளம் பயிர்கள் வளர்ந்து பசுமையாக காணப்படுகின்றன.  விவசாயப்பணிகள் அதிகம் நடைபெறும் இந்த கிராமப்பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்தும், மின்கம்பிகள் தாழ்வாகவும் செல்கின்றன.

குறிப்பாக எரிச்சநத்தம் முதல் சிவகாசி வரை உள்ள சாலையோர விவசாய வயல் பகுதிகளில் மின்கம்பங்கள் உயர்அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. அதிக காற்று, மழை காரணமாக இந்த மின்கம்பங்கள் சரிந்து வயல்வெளிகளில் விழுந்தால் விவசாயிகள், ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இவற்றை உடனடியாக  சரிசெய்ய வேண்டும் என்றும், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி தரவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை விவசாயி முருகன் கூறுகையில், ``விளைநிலப் பகுதியில் சாய்ந்து நிற்கும் மின்கம்பங்கள் பகுதிகளில் விவசாய வேலைகளை கவனமாக செய்ய வேண்டி உள்ளது.  மின்கம்பம், கம்பிகள், வயர்களை முறையாக பராமரிக்கவேண்டும்’’ என்றார்.

Tags : Sivakasi ,lands , Sivakasi Town Police Station Construction, Recession
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...