திருவில்லிபுத்தூர் அருகே பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் கிணறுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக திருவில்லிபுத்தூர் அருகே பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையான கிணறுகள் நிரம்பி வழிகின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்சாபுரம் பகுதியில் உள்ள பெரும்பான்மையான கிணறுகள் நிரம்பி உள்ளன. கிணற்றின் மேல் பரப்பில் நின்று கொண்டு காலை கீழே வைத்தால் கிணற்றுக்குள் விழுந்து விடும் வகையில் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம்  கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனாலும், தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும்  மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் அனைத்தும் அழுகி போய் விட்டன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,`` தொடர்மழையால் எங்களுக்கு ஒரே ஆறுதல் கிணறுகள் நிரம்பியுள்ளது தான். இதனால் மம்சாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது’’ என்றனர்.

Related Stories:

>