×

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நீடாமங்கத்தில் ரயில்வே மேம்பால பணி துவங்கப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்:. திருவாரூர் மாவட்டம் நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை நீடாமங்கலம் வழியாக செல்கிறது.நீடாமங்கலத்தில் உள்ள ரயில்வே ஜங்சன் வழியாக மன்னை-சென்னை, கோவை-மன்னை, எர்ணாகுளம்-காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்கள் சென்றது.மேலும் திருச்சி-நாகூர், திருச்சி-வேளாங்கண்ணி, மன்னை-காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் பயணிகள் ரயில் சென்றது.மேலும் நீடாமங்கலத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்களுக்கு அரிசி பொது வினியோக திட்டத்திற்கும்,நெல்மூட்டைகள் அரவைக்கும் ரயில் வேகன்களில் கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் நீடாமங்கலம் வழியாக ஆலங்குடி குருகோயில், வேளாங்கண்ணி, பூம்புகார், வேதாரண்யம், நாகூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்று வந்தனர்.கொரோனா வைரஸ் பரவலால் பெரும்பாலான சுற்றுலா தளங்களுக்கு பயணிகள் அதிகம் செல்ல வில்லை.

தற்போது நீடாமங்கலம் வழியாக சென்னை-மன்னை விரைவு ரயில், காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரயில்,மட்டும் செல்கிறது அது மட்டுமின்றி நீடா மங்கலத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுவினியோக திட்டத்திற்கு அரிசி மூட்டைகளும்,பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கா நெல்மூட்டைகள் அரவைக்காகவும் ரயில் வேகன்களில் (பெட்டிகள்)அனுப்பப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி தஞ்சை,நாகை,பட்டுக்கோட்டை,கும்பகோணம் பகுதிகளுக்கு பஸ்கள் செல்கிறது.இதனால்,நீடாமங்கலத்தில் பெரும் போக்கு வரத்து,நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீடாமங்கலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதையடுத்து ஜெயலலிதா கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக சட்ட சபை கூட்டத்தில் நீடாமங்கலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலாலும், நாள் ஒன்றுக்கு 17 முறை போடப்படும் ரயில்வே கேட்டாலும் பயணிகள்,பொது மக்கள் மிகவு அவதி படுகின்றனர் என்ற நோக்கில் சட்ட மன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் படி நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.அதன் பிறகு மேம்பாலம் கட்டும் பணிக்கான அளவிடும் பணிகள் நடந்தது. பிறகு நிறுத்தி வைக்கப்படும்.தினகரனில் செய்தி வெளியாகும் போது மீண்டும் அளவிடும்,பணி நடை பெறும்.இதே,போன்று நடந்த பணிகள் தற்போது அந்த பணி கிடப்பில் போடப்பட்டுய்ளது.
தற்போது ரயில் மற்றும் பஸ் சேவை குறைந்த நிலையிலும் நேற்று காலை ரயில் ஸ்டேசனுக்கு நெல் ஏற்ற குட்ஸ் வந்ததால் போடப்பட்ட கேட்டால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. நோயாளிகளை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் கேட்டில் மாட்டி கொண்டது.எனவே நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விரைவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Traffic, congestion, Needamangam, railway overpass, work
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...