×

இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை: இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி

கொழும்பு: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும், கடந்த 16ம் தேதி முதல் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகளுக்கும், மியான்மர், மொரிஷியஸ் மற்றும் சிஷெல்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா இலங்கைக்கு இலவசமாக வழங்கியது. இந்தியாவைப் போல இலங்கையிலும் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கு ஜன.,29 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் நாளில் 5,286 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் யாருக்கும் தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பிரதமர் மோடிக்கும், இந்தியாவுக்கும் நன்றி தெரிவித்தார்.


Tags : government ,India ,Sri Lankan ,Govshield , No side effects for those who have been vaccinated by India's Govshield: Sri Lanka thanks India
× RELATED இலங்கை தமிழர் முகாம் பகுதியில் சாக்கடை வடிகாலை தரம் உயர்த்த வேண்டும்