×

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் வங்கதேச அணியில் ஷாகிப்

தாக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணியில், காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் பிப். 3ம் தேதியும், 2வது டெஸ்ட் தாக்காவில் பிப். 11ம் தேதியும் தொடங்க உள்ளன. இந்த தொடருக்கான வங்கதெச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோமினுல் ஹக் தலைமையில் மொத்தம் 18 வீரர்கள் அடங்கி அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீசுடன் கடந்த 25ம் தேதி நடந்த 3வது ஒருநாள் போட்டியின்போது காயம் அடைந்த ஷாகிப் அல் ஹசன், முழு உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரர்கள் யாசிர் அலி, ஹசன் முகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம்: மோமினுல் ஹக் (கேப்டன்), தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், நஜ்முல் உசேன் ஷான்டோ, முஷ்பிகுர் ரகிம், முகமது மிதுன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, சைப் ஹசன், முஸ்டாபிசுர் ரகுமான், மெகிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஷத்மன் இஸ்லாம், நயீம் ஹசன், டஸ்கின் அகமது, அபு ஜாயேத், எபாதத் உசேன், ஹசன் முகமது.
 

Tags : Shakib ,team ,West Indies Test ,Bangladesh , Shakib in the West Indies Test series Bangladesh
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...