×

திருச்சியில், லாரி மீது கார் மோதல்: சுகாதாரத்துறை இணை இயக்குனர் பலி

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னை சுகாதாரத்துறை இணை இயக்குனர் பலியானார். கோயம்புத்தூரை சேர்ந்தவர் மைக்கேல் ஜான். இவரது மகன் ஸ்டாலின் மைக்கேல். டாக்டரான இவர் சென்னை சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நேற்று காலை காரில் சென்னை திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அடுத்த நெடுங்கூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது இவரது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் டாக்டர் மைக்கேல் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த சிறுகனூர் போலீசார் டாக்டரின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Trichy ,car collision ,Co-director ,health department , In Trichy, car collision with lorry: Co-director of health department killed
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்