×

மாற்றுத்திறன் மாணவர்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரும் பயிற்றுநர்கள் டிபிஐயில் தொடர் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்றுநர்கள் சுமார் 3000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு சம்பள உயர்வும் அறிவிக்கப்படவில்லை. ஒரே மாதிரியாக ரூ.20 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.  தங்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தங்களின் கோரிக்கைகள் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் மதியம் முதல் 200க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.


Tags : Instructors ,teachers ,DPI , Instructors who train teachers of students with disabilities have a series of struggles at DPI
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...